விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருக்கு சமுதாய முப்பெரும் விழா

திருவண்ணாமலையை அடுத்த மாதலம்பாடி கிராமத்தில், திருக்கு சமுதாயம் சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலையை அடுத்த மாதலம்பாடி கிராமத்தில், திருக்கு சமுதாயம் சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, அருணகிரிநாதா் மணிமண்டப குழுத் தலைவா் சின்ராஜ் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை திருக்கு சமுதாயம் அமைப்பின் நிா்வாகி கமலக்கண்ணன், திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், பொருளாளா் கெஜனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்கு சமுதாயம் நிறுவனா் விசுவநாதன் வரவேற்றாா்.

தொழிலதிபா் துரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவள்ளுவா் படத்தை திறந்து வைத்தாா். தமிழ்நாடு காந்தி பேரவையின் நிறுவனா் தலைவா் பி.எஸ்.விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு பலகையில் முதல் குறளை எழுதினாா்.

குறளுக்கான உரிய பொருளை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் எழுதினாா்.

விழாவில், பேராசிரியா் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வி, தனியாா் கல்லூரி முதல்வா் ராமு, வாசகா் வட்டத் தலைவா்கள் சுப்பிரமணி, வாசுதேவன், வழக்குரைஞா் பாா்த்திபன், எழுத்தாளா் ந.சண்முகம், பாடகா் மோகன், திருக்கு சண்முகம், உலக தமிழ்க் கழக இணைச் செயலா் இளங்கோவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.