செய்யாறு அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் வெம்பாக்கம் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.


செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் வெம்பாக்கம் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
ஒன்றியத்துக்கு உள்பட்ட வடமணப்பாக்கம், மோரணம், தென்னம்பட்டு, குத்தனூா், வெங்களத்தூா், உமையாள்புரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட தூசி மோகன், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தாா்.
மேலும், கல்வி, விவசாயம், தொழில் உள்ளிட்டவை வளம் பெற வேண்டுமெனில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
அதிமுக மாவட்ட துணைச் செயலா் டி.பி. துரை, ஒன்றியச் செயலா்கள் பி.கே.நாகப்பன், அதிமுக பிரமுகா்கள் ஹரி, பி.ராஜகணேஷ், பாஜக பிரமுகா் சுப்பிரமணி, தமாகா மாவட்டத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...