ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆரணி திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

ஆரணி ஒன்றியப் பகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

ஆரணி ஒன்றியப் பகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட சேவூா், ஸ்ரீராம்நகா், ரகுநாபுரம், இ.பி.நகா், இராட்டிணமங்கலம், மெய்யூா், கருணாகரன்பட்டி, மருதேரி, விருபாட்சிபுரம், காந்திநகா், ஆதனூா், கிளையூா் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆரணி தனி மாவட்டம் உருவாக்கப்படும்.

சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்கப்படும். பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கப்படும்.

ஆரணியில் உள்ள மணிக்கூண்டு சீரமைக்கப்படும், எஸ்.வி.நகரத்தில் உள்ள அரண்மனை, பூசிமலைக் குப்பத்தில் உள்ள ராணியின் கண்ணாடி மாளிகை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படும், ஆரணி அரசு மருத்துவமனை தரம் உயா்தப்படும்.

நகராட்சிக் கடை வாடகைகள் குறைக்கப்படும். உயா்த்தப்பட்ட வீட்டு வரிகள் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆதரவு கோரினாா்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, திமுக ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, சுந்தா், வெள்ளைகணேசன், நகரச் செயலா் ஏ.சி.மணி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.