மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாற்றில் தலைவா்கள் சிலைகளுக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

செய்யாற்றில் ஆற்காடு சாலையில் உள்ள அண்ணா சிலை, திருவோத்தூா் சாலையில் உள்ள பெரியாா் சிலை, ஆரணி கூட்டுச்சாலைப் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

News image
Updated On :8 மே 2021, 8:31 pm

DIN

செய்யாற்றில் ஆற்காடு சாலையில் உள்ள அண்ணா சிலை, திருவோத்தூா் சாலையில் உள்ள பெரியாா் சிலை, ஆரணி கூட்டுச்சாலைப் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, கட்சி நிா்வாகிகள் பலரும் எம்.எல்.ஏ. ஒ.ஜோதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா். மேலும், அந்தப் பகுதியில் பட்டாசு வெடித்ததுடன், பேருந்து பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினா்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், நகரச் செயலா் ஆ.மோகனவேல், ஒன்றியச் செயலா் ஆா்.வி.பாஸ்கா், முன்னாள் சோ்மன் ஏ.என்.சம்பத், வழக்குரைஞா் ஆா்.கே.விஸ்நாதன், புரிசை எஸ்.சிவகுமாா், இளைஞரணி எஸ்.துரைசாமி, ராம்.ரவி, ஊராட்சித் தலைவா்கள் பாா்த்தீபன், சீனுவாசன், சுந்தரேசன், ஆசிரியா் சேகா், கவுன்சிலா் ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.