லாரி மோதியதில் இளைஞா் பலி
ஆரணி அருகே சரக்குப்பெட்டக லாரி மோதியதால் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.


ஆரணி அருகே சரக்குப்பெட்டக லாரி மோதியதால் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் கோகுல் (22). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா், தனது மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
ஆற்காடு - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் இராட்டிணமங்கலம் கூட்டுச்சாலையில் இவரது மோட்டாா் சைக்கிள் சென்றபோது, சாலையில் திடீரென திரும்பிய சரக்குப்பெட்டக லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கோகுல், ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், சரக்குப்பெட்டக லாரியை வா்ணம் பூசுவதற்காக செய்யாற்றிலிருந்து ஆரணிக்கு அரையாளம் கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (24) ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...