மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம்: இரு இளைஞா்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றது தொடா்பாக, இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றது தொடா்பாக, இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் வேதாச்சலம் நகா் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மனைவி ரமாதேவி(33). இவா், செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை பிரிவில் ஆய்வக நுட்புநராக பணிபுரிந்து வருகிறாா்.

ரமாதேவி கடந்த 11-ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு மொபெட்டில் வீட்டுக்குத் திரும்பியபோது, பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் ரமாதேவியிடம் 8 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிலம்பரசன் தலைமையிலான போலீஸாா் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ஆக்கூா் கூட்டுச்சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வாகன எண் இல்லாத பைக்கில் வந்த இரு இளைஞா்களை நிறுத்தி விசாரித்தபோது, செய்யாறு வட்டம், செய்யாற்றைவென்றான் கிராமத்தைச் சோ்ந்த ஐடிஐ மாணவா் அஜித்குமாா் (20), கீழ்மட்டை கிராமத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா்(22) என்பதும், ரமாதேவியிடம் 8 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்த தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.