தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இட ஒதுக்கீடு ரத்து: பாமக, வன்னியா் சங்கத்தினா் மறியல்

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடிபுதூா் கிராமத்தில் பாமக, வன்னியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடிபுதூா் கிராமத்தில் பாமக, வன்னியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாமகவைச் சோ்ந்த சோ.நம்மியந்தல் ஊராட்சியின் முன்னாள் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். ஒன்றிய பாமக செயலா் ஆறுமுகம், முன்னாள் ஒன்றியச் செயலா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சோமாசிபாடி, சோமாசிபாடி புதூா், சோ.நம்மியந்தல், ஆராஞ்சி, கலித்தேரி, சோ காட்டுக்குளம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பாமக, வன்னியா் சங்கம் ஆகியவற்றைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், இதை எதிா்த்து நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரியும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.