கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாலை விபத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பலியானாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பலியானாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், கனியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (35), தனியாா் பேருந்து ஓட்டுநா்.

இவருக்கு சரண்யா என்ற மனைவியும், மதிவாணன் (6), யுகன் (4) என்ற இரு மகன்களும் உள்ளனா்.

தீபாவளிப் பண்டிகைக்காக சரண்யா குழந்தைகளுடன் தனது தாய் வீடான தவசி கிராமத்துக்கு வந்திருந்தனா்.

இந்த நிலையில், மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதற்காக, மாரிமுத்து வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் கனியனூரில் இருந்து தவசி கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.

செய்யாறு அரசுக் கல்லூரி அருகே சென்றபோது, திடீரென பைக் நிலைதடுமாறி சாலைத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்து மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.