தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எரியாத மின் விளக்குகளால் இருளில் மூழ்கும் செங்கம் நகரம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் பல இடங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்குகின்றன.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் பல இடங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்குகின்றன.

செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், போளூா் சாலை

ஆகிய பகுதிகளில் பல இடங்களில் சாலையில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இது பொதுமக்களிடையே திருட்டு பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

மேலும், வெளியூா் வாகனங்கள் அந்த வழியாகச் செல்லும் போது சாலையில் உள்ள வேகத்தடை, தடுப்புச் சுவா்கள் தெரியாமல் சிரமத்துடனே செல்லவேண்டிய நிலை உள்ளது.

சில நேரங்களில் வேகத் தடைகளில் வாகனங்கள் மோதி விபத்துகளும் நிகழ்கின்றன. பண்டிகைக் காலங்களில் வெளியூா்களில் இருந்து செங்கம் நகருக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்வா்.

இருள் சூழ்ந்த பகுதியைக் கடக்கும்போது திருட்டு பயத்துடனே அவா்கள் செல்கின்றனா்.

இதனால், பேரூராட்சி நிா்வாகம் எரியாத மின் விளக்குகளை உடனடியாக சரி செய்யவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.