நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (நவ.13) மாலை 6 மணியளவில் செங்கம் சதுா்த்தி குழு சாா்பில், 18-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (நவ.13) மாலை 6 மணியளவில் செங்கம் சதுா்த்தி குழு சாா்பில், 18-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

சனிக்கிழமை மாலை 6.10 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறாா். இதையொட்டி, செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனை நடைபெறும்.

மேலும், மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரா்களுக்கு பரிகார பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை செங்கம் சதுா்த்தி குழுவினா், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊா் முக்கியப் பிரமுகா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.