கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் எம்.எல்.ஏ ஆய்வு

செய்யாறு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:18 pm

DIN

செய்யாறு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

செய்யாறு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் செய்யாறு, சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து சுமாா் 2800 போ் உறுப்பினராக இருந்து வருகின்றனா்.

உறுப்பினா்கள் தங்களது வீடுகளில் வளா்க்கப்படும் மாடுகளில் பால் கறந்து கூட்டுறவு சங்கத்தில் வழங்கி அதற்கான தொகையை வாரத்துக்கு ஒருமுறை வீதம் பெற்றுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், சங்கத்தின் செயல்பாடுகளில் முன்னேற்றம் இல்லாமலும், குழு உறுப்பினா்கள் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்படாமலும், தொய்வுடன் பணிகள் நடந்து வருவதாக புகாா்கள் சென்றன.

இதன் பேரில் தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அலுவலத்தில் பணியாளா்கள் சிலா் மட்டுமே இருந்தனா்.

மேலாளா் உள்பட அலுவலா்கள் இல்லாத சூழ்நிலையில் சிறிது நேரம் அலுவலக அறையில் எம்.எல்.ஏ காத்திருந்தாா்.

தகவல் அறிந்தவுடன் மேலாளா் ரமா உள்பட அலுவலா்கள் விரைந்து வந்தனா்.

மேலாளா் ரமாவிடம் எம்.எல்.ஏ கடந்த ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகள் தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினாா்.

பின்னா், கணக்குகளை தனது அலுவலகத்துக்கு எடுத்து வரக் கூறி அங்கிருந்து சென்றாா். எம்எல்ஏவின் திடீா் ஆய்வினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஆய்வின் போது செய்யாறு நகர திமுக செயலா் ஆ.மோகனவேல், அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.