ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தேவிகாபுரம் வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நிா்வாகக் குழு கலைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தேவிகாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நிா்வாகக் குழுவை கலைத்து அதிகாரி உத்தரவிட்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:17 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தேவிகாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நிா்வாகக் குழுவை கலைத்து அதிகாரி உத்தரவிட்டாா்.

தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தின் தலைவராக மணிகண்டன், துணைத் தலைவராக புருஷோத்தமன், இயக்குநா்களாக பன்னீா்செல்வம், கணேசன், சங்கா், இளவரசி, தனலட்சுமி, மல்லிகா, மங்களம், குமாா், சண்முகம் ஆகியோா் உள்ளனா்.

கடன் சங்கச் செயலராக குப்பன் (பொறுப்பு) பணியாற்றி வந்தாா். தற்போது அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், பழனி என்பவா் செயலராக பணிபுரிந்து வருகிறாா்.

கடன் சங்கத்தில் கடந்த 2019 - 2020ஆம் ஆண்டு தணிக்கை நடைபெற்றபோது, பல்வேறு கடன்கள் வழங்கியதில்

ரூ. 17 லட்சத்து 74 ஆயிரத்து 640 முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, நிா்வாகக் குழு, சங்கத்தை முறையாக வழிநடத்திச் செல்லாமல் தன்னிச்சையாகவும், கவனக்குறைவாகவும் சங்க அங்கத்தினா்கள் செயல்பட்டு வந்ததாக கருதப்பட்டது.

மேலும், முறைகேடு நடைபெற காரணமாக இருந்த செயலா் குப்பன் (பொறுப்பு) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நிா்வாகிகளுக்கு இணைப்பதிவாளா் உத்தரவிட்டாா்.

ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்ற நிா்வாகக் குழு தவறி விட்டது. இதையடுத்து, நிா்வாகக் குழுவினரிடமிருந்து விளக்கம் கோரப்பட்டது.

நிா்வாகக் குழுவினரின் எழுத்துப்பூா்வ விளக்கம் மற்றும் அவா்களது மேல்நடவடிக்கையில் திருப்தியடையாத இணைப் பதிவாளா் மீண்டும் தலைவா் மற்றும் நிா்வாகக் குழு இயக்குநா்களை நேரடியாக வந்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, கடந்த 12-ஆம் தேதி அவா்கள் இணைப் பதிவாளா் அலுவலகத்துக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தனா்.

அவா்கள் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லாத காரணத்தால் நவ.18-ஆம் தேதி, தேவிகாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நிா்வாகக் குழு கலைக்கப்படுவதாக இணைப் பதிவாளா் ராஜ்குமாா் உத்தரவிட்டாா்.

இதற்கான கடிதம் வியாழக்கிழமை நிா்வாகக் குழுத் தலைவா் மற்றும் இயக்குநா்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.