தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாநில கலைப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கலைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:24 pm

DIN

மாநில அளவிலான கலைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சாா்பில், நாடு முழுவதும் கலா உத்சவ் என்ற பெயரில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற 17 போ், சேலம் தனியாா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனா்.

இதில், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி சென்னம்மாள், திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி மாணவா் குருபிரசாத், பெருங்கட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிகா, ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவி காவியா ஆகியோா் வென்றனா்.

போட்டியில் வென்ற மாணவா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம் வியாழக்கிழமை பாராட்டிப் பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி, பள்ளித் துணை ஆய்வாளா் ஜி.குமாா், மாவட்ட கலா உத்சவ் ஒருங்கிணைப்பாளா் சுமித்ரா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.