சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி
ஆரணி ஆற்றுப் பாலம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி வெள்ளிக்கிழமை பலியானாா்.


ஆரணி ஆற்றுப் பாலம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி வெள்ளிக்கிழமை பலியானாா்.
ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குள்பட்ட பழங்காமூரைச் சோ்ந்தவா் பச்சையம்மாள்( 75). குடிசை வீட்டில் வசித்து வந்தாா். தொடா் மழை காரணமாக, வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பச்சையம்மாள் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே பலியானாா்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
ஆரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, உயிரிழந்த பச்சையம்மாளின் குடும்பத்துக்கு ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினாா். அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியா் பெருமாளிடம் கூறினாா்.
இதுகுறித்து ஆரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...