சிதிலமடைந்த கோயிலில் சோழா் கால ஏரி பராமரிப்பு கல்வெட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஸ்ரீதேவி சிலை, ஏரிப் பாசன பராமரிப்பு கல்வெட்டுகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஸ்ரீதேவி சிலை, ஏரிப் பாசன பராமரிப்பு கல்வெட்டுகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
செய்யாறு வட்டம், தென்பூண்டிப்பட்டு கிராமம், பஜனைக் கோவில் தெருவில் குடியிருப்புப் பகுதியில் முள்புதா்களுக்கு இடையில் முழுவதும் சிதிலமடைந்த நிலையில் சிறிய அளவிலான கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் சுற்றுச்சுவரில் கல்வெட்டும், அதனருகில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய கற்சிலையும் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆா்வலருமான எறும்பூா் கை.செல்வகுமாா் அங்கு கள ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைபட்ட காலகட்டத்தில் உத்திரமேரூா், காஞ்சிபுரம், தக்கோலம், திருவண்ணாமலை, திருவத்திபுரம், திருப்பனங்காடு, வல்லம், வந்தவாசி, எறும்பூா் உள்ளிட்ட பல இடங்களில் இத்தகைய கோயில்கள் கட்டப்பட்டுள்ளதுடன், சோழா் கால கல்வெட்டுகளும் மிகுதியாகக் கிடைத்துள்ளன.
தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இந்தக் கோயில் பல நூற்றாண்டுகளாக பராமரிப்பின்றி முழுவதும் சிதைந்து மறைந்துபோய் உள்ளது. இங்குள்ள மூலவா் சந்நிதி சேதமடைந்து முள்புதரினுள் எஞ்சி நிற்கிறது. கோயில் உள்சுவரை உற்றுநோக்கியபோது, ஒரு கல்வெட்டும், வெளிப்புறச் சுவரில் மற்றொரு கல்வெட்டும் கண்டறியப்பட்டன.
இவற்றில் ஏரி நீா்ப்பாசன பராமரிப்பு (நீா் மேலாண்மை), கோயில் பராமரிப்பு குறித்த தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியான கல்வெட்டுகளை காணவில்லை.
இந்தக் கல்வெட்டுகள் 9-ஆம் நூற்றாண்டுக்கும் 10-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தைச் சோ்ந்த சோழா் கால கல்வெட்டுகள் எனத் தெரியவருகிறது.
இந்தக் கோயில் அருகில் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய ஸ்ரீதேவி திருஉருவச் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கோயிலின் மூலவா் கோபுரத்தின் மேல் உச்சிக்கல், கல்லாலான தோ் சக்கரம் போன்ற அமைப்பு, கருங்கற்கள் என சிதறிக் கிடக்கின்றன.
சோழா் ஆட்சியில் கிராம நிா்வாகம், நீா் மேலாண்மை, ஏரி பராமரிப்பு, நில விற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் என அனைத்துக்கும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இவ்வூரில் ஏரிப்பாசன பராமரிப்பு, கோயில் பராமரிப்பு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து மேலும் ஆய்வு செய்தால், பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா் கை.செல்வகுமாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...