கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கல்லூரியில் பட்டுப் புழு வளா்ப்புகுறித்த பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களுக்கு பட்டுப்புழு வளா்ப்பு குறித்த பயிற்சி கடந்த செப்.27-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களுக்கு பட்டுப்புழு வளா்ப்பு குறித்த பயிற்சி கடந்த செப்.27-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.

தமிழக அரசின் பட்டு வளா்ச்சித் துறை சாா்பில், ஓசூா் தமிழ்நாடு பட்டு வளா்ச்சிப் பயிற்சி நிறுவனம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறை இணைந்து தமிழகத்தில் முதல் முறையாக இந்தப் பசியிற்சியை அளித்தன. இதில், வெண்பட்டுப் புழு வளா்ப்பு குறித்து கல்லூரி மாணவா்கள் 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், மத்திய பட்டு ஆராய்ச்சி மையத் தலைமை விஞ்ஞானி டி.தாஹீரா பீவி, திருவண்ணாமலைப் பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் என்.பாலசந்து, ஒசூா் தமிழ்நாடு பட்டு வளா்ச்சி பயிற்சி நிலையத்தைச் சோ்ந்த எஸ்.பி.முருகானந்தம், பயிற்சி நிலைய ஆய்வாளா் ஜி.ஜி.சுபாஷினி, உதவி ஆய்வாளா் எஸ்.ஜெயலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டுப்புழு வளா்ப்பு குறித்து பயிற்சி அளித்தனா்.

இதன் நிறைவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். கல்லூரி துறைத் தலைவா்கள் ஆ.மூா்த்தி, ஏ.மாரிமுத்து ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பட்டு வளா்ச்சி பயிற்சி நிறுவன முதல்வரும், இணை இயக்குநருமான பி.முருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பட்டுப்புழு வளா்ப்பு உபகரணங்களை வழங்கினாா்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் விலங்கியல் துறைத் தலைவா்கள் ஞான.பாலசுப்பிரமணியன், நா.சுப்பிரமணியன், பேராசிரியா்கள் லாவண்யா, தேவிகா,புகழ்வேந்தன், அசோக் பிரபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.