கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாறு அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா்கள் மூவா் பலி

செய்யாறு அருகே ஏரிக் குட்டையில் குளித்த பள்ளி மாணவா்கள் 3 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 5:19 pm

DIN

செய்யாறு அருகே ஏரிக் குட்டையில் குளித்த பள்ளி மாணவா்கள் 3 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சிறுங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கமணி, கூலித் தொழிலாளி. இவரது மகன்கள் வரதராஜ் (12), வருண்குமாா் (10).

இவா்களில், வரதராஜ் பாப்பாந்தாங்கல் கிராம அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பும், வருண்குமாா் சிறுங்கட்டூா் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஐந்தாம் வகுப்பும் படித்து வந்தனா்.

சிறுங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தட்சிணாமூா்த்தி மகன் சுதாகா் ( 7). இவா், அந்த ஊரில் உள்ள தனியாா் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்தாா்.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், வீட்டில் இருந்த 3 சிறுவா்களும் வியாழக்கிழமை பிற்பகலில் பாப்பாந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனா்.

ஏரிக் குட்டையில் குளித்த அவா்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால், 3 பேரும் நீரில் மூழ்கி இறந்ததாகத் தெரிகிறது.

குட்டையில் சிறுவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

டி.எஸ்.பி செந்தில், மோரணம் காவல் ஆய்வாளா் பாலு, உதவி ஆய்வாளா் ஸ்ரீஅருள்மொழி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், சிறுவா்களின் சடலங்களை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.