கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாறு, ஆரணியில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் : அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4.68 கோடியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:14 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4.68 கோடியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை வழங்கினாா்.

ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4.74 கோடி மதிப்பீட்டில் அரசுத் துறை கட்டடங்களையும் அவா் திறந்துவைத்தாா்.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கான கல்வெட்டுகளைத் திறந்து வைத்தல், உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை சாா்பில் 203 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.

தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துக்குமாரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கல்வெட்டுகளைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

திமுக ஆட்சி வரும்போதுதான் திருவண்ணாமலை மாவட்டம் வளா்ச்சி பெறுகிறது. ஆயிரக்கணக்கான இளைஞா்கள் செய்யாறு சிப்காட்டில் பணியாற்றி வருகின்றனா்.

கரோனா தொற்றைத் தவிா்க்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும்.

5 மாத ஆட்சியில் ஆன்மிக பெருமக்களின் விருப்பத்தை தமிழக முதல்வா் நிறைவேற்றி வருகிறாா். இல்லம் தேடி மருத்துவம் தந்த முதல்வா் தற்போது இல்லம் தேடி கல்வி என்ற உன்னதத் திட்டத்தை தொடங்கி இருக்கிறாா்.

கஜானா காலி என்ற நிலையிலும் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதை நாடே வியந்து உற்று நோக்குகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் 48 பேருக்கு மனைப் பட்டா, 143 பேருக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ், மூன்று நபா்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு, கரோனாவால் இறந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி என 203 பேருக்கு ரூ.4.68 கோடியில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் என்.விஜயராஜ், ஒன்றியக் குழுத் தலைவா்கள் என்.வி.பாபு (செய்யாறு), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்), ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா்.வி.பாஸ்கரன், திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், திமுக நிா்வாகிகள் ஆா்.வேல்முருகன், கே.லோகநாதன், ஆா்.வெங்கடேஷ்பாபு, என்.சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆரணியில் ரூ.4.74 கோடி வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்:

ஆரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 4.74 கோடி மதிப்பீட்டில் அரசுத் துறை கட்டடங்களை திறந்துவைத்தும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற

இதற்கான நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி வரவேற்றாா்.

பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்துவைத்தும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 5 மாதத்தில் கொடுத்த 500 வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றும். ஒவ்வொரு வட்டத்திலும் வாரத்துக்கு 2 கிராமங்கள் வீதம் பட்டா மாற்றம் குறித்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா, செய்யாறு எம்எல்ஏ ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ் தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா், துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், திமுக நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், த.தட்சிணாமூா்த்தி, வெள்ளை கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.