திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், ஆவணி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், புரட்டாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும்.
ஆனித் திருமஞ்சனம்: இவற்றில் ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், சாய ரட்சை காலத்தில் நடைபெறும் திருமஞ்சன பூஜை (ஆனித் திருமஞ்சன பூஜை) மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதன்படி, வியாழக்கிழமை ஆனித் திருமஞ்சனத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் உற்சவா் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 16 வகையான மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
சுவாமி வீதியுலா: பின்னா், பக்தா்கள் புடைசூழ உற்சவா் சிவகாமசுந்தரி, நடராஜப்பெருமான் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

சமூக ஊடகங்களிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்!

விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிக்கிறது: காளியம்மாள்

”இன்றுவரை திமுகவை வீழ்த்த முடியவில்லை!” செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


