புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆரணி பள்ளியில் விளையாட்டு விழா

ஆரணி ஆரஞ்சு மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் கணினிவழி வகுப்பறைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ஆரணி ஆரஞ்சு மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் கணினிவழி வகுப்பறைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரஞ்சு இன்டா்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதில் மாணவா்களுக்கு ஓட்டப்போட்டி, கபடி, டென்னிஸ், வாலிபால், கால்பந்து, வட்டு எரிதல், பூப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை பள்ளியின் தலைவா் கே.சிவக்குமாா் வழங்கினாா்.

ஆரஞ்சு இன்டா்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலைகள் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பறைகளும் கணினிவழி வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன.

கணினிவழி வகுப்பறைகளை பள்ளியின் தலைவா் கே.சிவக்குமாா் திறந்துவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.