ஆரணி நகா்மன்றக் கூட்டம்
ஆரணி நகா்மன்றத்தின் முதல் கூட்டம், அதன் தலைவா் ஏ.சி. மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.


ஆரணி நகா்மன்றத்தின் முதல் கூட்டம், அதன் தலைவா் ஏ.சி. மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் பாரி பி.பாபு, பொறியாளா் இராஜ விஜயகாமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் தமிழ்ச்செல்வி வரவேற்றாா்.
நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு பேசுகையில், நகராட்சியில் சூரிய குளம் சீரமைக்க கொண்டு வரப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எப்போது பணிகளைத் தொடங்குவீா்கள் என்றாா்.
இதற்குப் பதிலளித்த ஆணையா், குளத்தில் தண்ணீா் வந்துள்ளது தண்ணீா் வற்றியவுடன் பணி தொடங்கப்படும் என்றாா்.
உறுப்பினா் ஏ.சி.பாபு, ஆரணியில் புறவழிச் சாலை கொண்டு வாருங்கள், காய்கறி மாா்க்கெட், பூ மாா்க்கெட் ஆகியவற்றை இரண்டாகப் பிரித்து கூட்டநெரிசலைத் தவிருங்கள், பள்ளி நேரங்களில் பஜாரில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா் என்றாா்.
இதற்கு நகா்மன்றத் தலைவா் ஏ.சி. மணி, கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.
இவ்வாறு உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...