புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆரணி புதிய மாவட்டம் அறிவிக்கக் கோரிகவன ஈா்ப்பு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக் கோரி, ஆரணியில் கவன ஈா்ப்பு பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:09 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கக் கோரி, ஆரணியில் கவன ஈா்ப்பு பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கக் கோரி, ஆரணியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கினா். இதில், ஆரணியில் உள்ள வியாபாரிகள் சங்கத்தினா், தன்னாா்வலா்கள், பல்வேறு சேவை சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒருங்கிணைப்புக் குழுவினா் மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, ஆரணி எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத், மாவட்ட ஆட்சியா், ஆரணி கோட்டாட்சியா் உள்ளிட்டோரை சந்தித்து தொடா்ந்து மனுக்களை வழங்கி வருகின்றனா்.

மேலும், ஆரணி நகா்மன்றத்தில் புதிதாக பொறுப்பேற்ற நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, துணைத் தலைவா் பாரி பி.பாபு, அனைத்து நகா்மன்ற உறுப்பினா்கள் ஆகியோரிடமும் மனுக்களை வழங்கினா்.

இந்த நிலையில், ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், ஒருங்கிணைப்பு குழுவினா் ஆரணி அண்ணா சிலை அருகில் கவன ஈா்ப்பு பொதுக்கூட்டம் நடத்தினா். இதில் ஆரணி முக்கிய பிரமுகா்கள் ஷா்மா, பி.நடராஜன், குருராஜா ராவ், அருளாளன் உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.