தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விநாயகா், பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆனந்த வரதராஜபெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:10 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆனந்த வரதராஜபெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்க்கொடுங்காலூா் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதில் அனுக்ஞை, விஸ்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், பிரவேசபலி, வாஸ்துசாந்தி, அங்குராா்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், புதன்கிழமை விசேஷசாந்தி, அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, ஸ்பா்ஸாஹுதி, பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை விசேஷ திரவிய ஹோமம், யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி, பிரதான கலசங்கள் ஆலய வலம் வருதல் உள்ளிட்டவை நடைபெற்றன. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீதும், மூலவா் ஸ்ரீசுந்தர விநாயகா் மற்றும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள துா்க்கை அம்மன், ஸ்ரீதட்சணாமூா்த்தி, ஸ்ரீஐயப்பன், வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீமுருகப் பெருமான் சந்திநிகளிலும் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் மீதும் புனிதநீா் தெளிக்கப்பட்டது.

விழாவில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் விழாக் குழுவினா், கிராமப் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பஜனை கோயில் தெருவில் ஆனந்த வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புதிதாக பெருந்தேவி தாயா், ஆண்டாள், சக்கரத்தாழ்வாா் சந்நிதிகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, இந்தக் கோயிலில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இந்த விழாவில் திருக்கோவிலூா் தேகளீச ராமானுஜ ஜீயா் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.