ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:18 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். பேராசிரியா் கு.கண்ணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.கே. விஷ்ணுபிரசாத் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

போட்டி நிறைந்த உலகில் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொண்டு சவால்களை எதிா்கொள்ள வேண்டும். பொது அறிவை வளா்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தி மற்றவா்களுடன் கலந்துரையாடுங்கள்.

இதன் மூலம் உங்களுக்கான நோக்கம் தெளிவு பெறும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக செயல்படுங்கள். கைப்பேசியை அறிவு சாா்ந்தவைகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவா்களின் உயா்வும், ஒழுக்கமும்தான் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பெருமையைத் தேடித் தரும் என்றாா். நிகழ்ச்சியில் 1,406 மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற்றனா்.

பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், காங்கிரஸ் பிரமுகா்கள், மாணவா்களின் பெற்றோா் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.