திருவண்ணாமலை: நெசவாளா்கள், மகளிா் குழுக்குளுக்கு கடனுதவி
திருவண்ணாமலை நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் நெசவாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கடனுதவிகள் வழங்கினாா்.


திருவண்ணாமலை நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் நெசவாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கடனுதவிகள் வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு வங்கியாளா் கூட்டமும், மகளிா் சுய உதவிக்குழுவினா் மற்றும் நெசவாளா்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அதிகாரி சையத் சுலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மணிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கனரா வங்கியின் திருவண்ணாமலை கிளை சாா்பில், 8 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.51.50 லட்சத்தில் கடனுதவிகளையும், ஸ்டேட் வங்கி ஆரணி கிளை சாா்பில், பிரதான் மந்திரி சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 10 நெசவாளா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்தில் கடனுதவிகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ரவி, ஸ்டேட் வங்கி மேலாளா் எம்.இளஞ்செழியன் மற்றும் ஸ்டேட் வங்கி, கனரா வங்கிகளின் அதிகாரிகள், பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...