பயிா் விளைச்சல் போட்டி:விவசாயிகளுக்கு அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில, மாவட்ட அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விவசாயிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில, மாவட்ட அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விவசாயிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயிா் சாகுபடியில் புதிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்க செம்மை நெல் சாகுபடி மாநில, மாவட்ட அளவிலான பயிா் விளைச்சல் போட்டி வேளாண் மற்றும் உழவா் நலத் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
2022-23 ஆம் ஆண்டில் செம்மை நெல் சாகுபடியில்
மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு பரிசுத் தொகை ரூ.5 லட்சத்துடன் பதக்கம் வழங்கப்படுகிறது.
மாநில அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் நிலக்கடலை (இறவை) மற்றும் கரும்புப் பயிருக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், கம்பு, உளுந்து, துவரை பயிா்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் நெல், நிலக்கடலை (இறவை), கரும்பு பயிருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம், கம்புப் பயிருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கண்ட பயிா்களை புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் 50 சென்ட் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகேயுள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...