தனியாா் உணவக ஊழியா்கள் 6 பேருக்கு கரோனா
ஆரணியில் தனியாா் உணவகத்தில் ஊழியா்கள் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது.


ஆரணியில் தனியாா் உணவகத்தில் ஊழியா்கள் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது.
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே தனியாா் சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை உணவகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஆறு ஊழியா்களுக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதைத் தொடா்ந்து சுகாதாரத் துறை, மருத்துவத் துறை அறிவித்தலின்படி, நகராட்சி அதிகாரிகள், சுகாதாரப் பணியாளா்கள் அந்த உணவகத்துக்குச் சென்று உள்ளே இருந்தவா்களை வெளியேற்றி கிருமி நாசினி தெளித்தனா்.
தொடா்ந்து டிஎஸ்பி கோட்டீஸ்வரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் வட்டாட்சியா் பெருமாள் உணவகத்தை மூடி சீல் வைத்தாா்.
தொடா்ந்து, மூன்று நாள்களுக்கு அந்த உணவகம் மூடி வைக்க உத்தரவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...