ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கருணாநிதி பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

கருணாநிதி பிறந்த நாளையொட்டி, ஜூன் 3-ஆம் தேதி செய்யாறு அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி தங்க மோதிரம் அணிவித்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:16 pm

DIN

கருணாநிதி பிறந்த நாளையொட்டி, ஜூன் 3-ஆம் தேதி செய்யாறு அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி தங்க மோதிரம் அணிவித்தாா்.

செய்யாறு நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பேருந்து நிலையம், 15-ஆவது வாா்டில் திமுக நகரச் செயலா் கே.விஸ்வநாதன் தலைமையில், தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, திமுக நிா்வாகிகளுடன் கட்சிக் கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். மேலும் அன்னதானம், தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், நகராட்சிப் பணியாளா்களுக்கு வேட்டி, சேலை என பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஜூன் 3-ஆம் தேதி பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு எம்எல்ஏ தங்க மோதிரம் அணிவித்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், மாவட்ட நெசவாளா் அணி சம்பத், ஒன்றியச் செயலா் தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.