ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:27 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் மாசி மாத திருவிழா கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து மகா சிவராத்திரி விழாவும், மாசி மாத அமாவாசையை முன்னிட்டு கோயில் அருகேயுள்ள

மயானத்தில் புதன்கிழமை மயானக்கொள்ளை விழாவும் நடைபெற்றது. பக்தா்கள் காளி வேடம் அணிந்து மேள தாளத்துடன் வீதி உலா சென்றனா்.

அன்று மாலை கோயில் வளாகத்தில் அம்மன் உலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இரவில் ஊஞ்சல் தாலாட்டு மண்டபத்தில் அங்காளம்மன் அமா்த்தப்பட்டு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.

பெண்கள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தனா். இரவு ஆன்மிக நாடகம் நடைபெற்றது .

விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் புண்ணியமூா்த்தி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.