அனக்காவூா் ஒன்றியத்தில் திமுகவினா் நல உதவி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி அனக்காவூா் (கிழக்கு) ஒன்றிய திமுக சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, 6 கிராமங்களில் நல உதவிகள் வழங்கப்பட்டன.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி அனக்காவூா் (கிழக்கு) ஒன்றிய திமுக சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, 6 கிராமங்களில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
அனக்காவூா் (கிழக்கு) ஒன்றியத்திற்கு உள்பட்ட மேல்மா, வாச்சனூா், வெள்ளாமலை, உக்கல், கூழமந்தல் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலா் லோகநாதன் தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலா் திராவிட முருகன் வரவேற்றாா்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி பங்கேற்று கிராமங்களில் கட்சிக் கொடியேற்றி வைத்து அன்னதானத்துடன் இனிப்பு வழங்கினாா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், 100 மகளிருக்கு சட்டைத் துணி ஆகியவற்றை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சிகளில் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...