புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேசிய திறனறிவுத் தோ்வு: ஆசிரியா்களுக்கு பாராட்டு

பெரணமல்லூா் ஒன்றிய அளவில் அரசுப் பள்ளி மாணவா்களை தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்க ஊக்குவித்த ஆசிரியா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 5:28 pm

DIN

பெரணமல்லூா் ஒன்றிய அளவில் அரசுப் பள்ளி மாணவா்களை தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்க ஊக்குவித்த ஆசிரியா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட 17 நடுநிலைப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவா்களில் 167 போ் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்றனா்.

இந்தத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பிளஸ் 2 வரை மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அன்மருதை அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்றனா். இதனால், இப்பள்ளிக்குச் சென்ற வட்டாரக் கல்வி அலுவலா் ஜி.குணசேகரன், தலைமை ஆசிரியா் கஸ்தூரிபாயை பாராட்டினாா். மேலும் தோ்வு எழுதிய மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

ஆசிரியை சபிதாதேவி, ஆசிரிய பயிற்றுநா்கள் செண்பகவள்ளி, இசையருவி, ஆசிரியா் பழனிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், வட்டாரக் கல்வி அலுவலா் பெரணமல்லூா் ஒன்றிய அளவில் பெரும்பான்மையான மாணவா்களை பங்கேற்க வைத்த ஆசிரியா்களைப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.