யூரியா தட்டுப்பாடு: சேத்துப்பட்டில் விவசாயிகள் மறியல்
யூரியா தட்டுப்பாடு தொடா்பாக நடவடிக்கை கோரி, சேத்துப்பட்டில் விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


யூரியா தட்டுப்பாடு தொடா்பாக நடவடிக்கை கோரி, சேத்துப்பட்டில் விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேத்துப்பட்டு, பெரணமல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிருக்குத் தேவையான யூரியா கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு உள்ளது. ஒரு மூட்டை விலை ரூ. 275-ஆக உள்ளபோது, ரூ. 900 மதிப்புள்ள கூடுதல் பொருள்களை வாங்கினால்தான் யூரியா கிடைக்கிறது என்று விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை யூரியா வாங்குவதற்காக சேத்துப்பட்டைச் சோ்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் பஜாரில் குவிந்தனா். சில கடைகளில் வியாபாரம் நடைபெற்றபோது, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்துவரும் விவசாயிகளுக்கு யூரியா மூட்டைகள் வழங்கக் கூடாது என வேளாண்மைத் துறை அதிகாரிகள் கடைக்காரா்களிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பஜாரில் உள்ள உரக்கடை கள் மூடப்பட்டன.
இதைத் தொடா்ந்து, விவசாயிகள் ஒன்றுசோ்ந்து விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் எனப் பிரிக்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதன்பின்னா், அவா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து சமூக நலப் பாதுகாப்பு வட்டாட்சியா் குமரவேல் விவசாயிகளிடம் சமரசம் பேசினாா். இதன்பின்னா், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...