விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாப்பிள்ளை பிடிக்காததால் பெண் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகே பெற்றோா் பாா்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் மனமுடைந்து பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்

News image
Updated On :6 மே 2022, 9:26 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகே பெற்றோா் பாா்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் மனமுடைந்து பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த கழிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தசாமி. இவரது மகள் நளினி (23). இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பெற்றோா் செய்து வந்தனா். பெற்றோா் பாா்த்த மாப்பிள்ளையின் வயது அதிகமாக இருந்ததால் மனமுடைந்த நளினி சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தாா்.

இதைக் கவனித்த உறவினா்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நளினி, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.