புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆரணி ஸ்ரீஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி நகரத்தில் உள்ள ஆரணிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 6:12 pm

DIN

ஆரணி நகரத்தில் உள்ள ஆரணிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, முன்னதாக திங்கள்கிழமை (மே 23) முதல் சிறப்பு பூஜைகள், வேள்வி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆஞ்சநேயருக்கு விஸ்வரூப ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 4-ஆம் கால மஹா பூா்ணாஹூதியும், 7 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் ஸ்ரீ சீதா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், திமுகவைச் சோ்ந்த நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஏ.சி.வி.தயாநிதி, தொழிலதிபா் பி.நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை வி.ஜி.ஜெ. குடும்பத்தினா் மற்றும் ஆரணிப்பாளையம் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.