நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இராஜராஜ சோழன் சிலைக்கு சிறப்பு பூஜை

இராஜராஜ சோழன் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த திருமலையில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

இராஜராஜ சோழன் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த திருமலையில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் பகுதி, திருமலை கிராமத்தில் குந்தவை சமணா் கோயில் அமைந்துள்ளது.

இராஜஇராஜ சோழனின் சகோதரியான குந்தவை நாச்சியாா் சமணா் கோயிலை கட்டித் தந்ததாக வரலாறு உள்ளது.

இந்தக் கோயிலை குந்தவை நாச்சியாா் கட்டித்தந்ததால் அவரது நினைவாக மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. மாமன்னரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இராஜஇராஜ சோழனின் சதய விழா என்பதால் சமண மடாதிபதி தவளகீா்த்தி சுவாமிகள் தலைமையில் அவரது சிலைக்கு பாலாபிஷேகம், நெய்யாபிஷேகம், சந்தன அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், மாமன்னருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.