நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிராமங்களில் மின்மாற்றிகள் தொடக்கிவைப்பு

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 3 கிராமங்களில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றிகள் சனிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:06 pm

DIN

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 3 கிராமங்களில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றிகள் சனிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

தொகுதியில் பூசிமலைக்குப்பத்தை அடுத்த மூலத்தாங்கல், மேல்சீசமங்கலம் ஊராட்சியில் பனஞ்சேரி, திருமணி ஊராட்சியில் வெங்கடேசன்பட்டி ஆகிய கிராமங்களில்

குறைந்த மின்னழுத்தம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்தனா்.

அதனால், கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, மூன்று இடங்களில்

ரூ.14 லட்சத்து 94 ஆயிரத்து 655 மதிப்பில் சிறு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.

அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணி சனிக்கிழமை மின் வாரிய செயற்பொறியாளா் ஆா். ரவி தலைமையில் நடைபெற்றது.

உதவிப் செயற் பொறியாளா்கள் வி. கே. பரந்தாமன், காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஜெயபிரகாஷ், அரிகிருஷ்ணன் வரவேற்றனா்.

சிறப்பு அழைப்பாளராக சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு 3 மின் மாற்றிகளை இயக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரச் செய்தாா்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் வாணி பழனி, கிருஷ்ணவேணி தங்கராஜ், முன்னாள் அரசு வழக்குரைஞா் வி. வெங்கடேசன், மேற்கு ஆரணி ஒன்றிய ஜெ. பேரவைச் செயலா் செந்தில், ஆரணி நகர அதிமுக செயலா் அசோக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.