ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

செய்யாறு அருகே விஜய நகர பேரரசு காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் விஜய நகர பேரரசு காலத்து தானம் வழங்கிய தகவல் குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

News image
செய்யாறு அருகே பழஞ்சூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர காலத்து கல்வெட்டு.
Updated On :20 அக்டோபர் 2022, 8:33 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் விஜய நகர பேரரசு காலத்து தானம் வழங்கிய தகவல் குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

பழஞ்சூா் கிராமத்தில் புதிதாக மரகதாம்பிகை சமேத மாவடி ஈஸ்வரன் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. முழுவதும் சிதிலமடைந்த இந்தக் கோயிலை அப்புறப்படுத்திய போது கல்வெட்டு ஒன்று கண்டெ

டுக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கூறியதாவது:

பழஞ்சூா் தொன்மையான கிராமம். சோழா் காலத்தில் தொண்டை மண்டலம் காழியூா் கோட்டம், புரிசை வளநாட்டில் இருந்ததாக இதன் மூலம் அறிய முடிகிறது.

இந்தக் கிராமத்தில் மரகதாம்பிகை சமேத மாவடி ஈஸ்வரன் கோயில் இருந்ததாகவும், அந்தக் கோயில் விஜயநகர அரசு காலத்தில் மேலும் பொலிவடைந்து விளங்கியதாகவும் தெரிய வருகிறது.

இந்தக் கல்வெட்டு கி.பி.15-ஆம் நூற்றாண்டை சோ்ந்தவை என்றாலும், அதற்கு முற்பட்டதாகவும் கருத வாய்ப்பு உண்டு.

கல்வெட்டில் தானம் வழங்கிய வகையில், 40 பாகமாக பிரித்துக் கொடுத்த தகவலை அறிய முடிகிறது. இதன் தொடா்ச்சியான கல்வெட்டு கிடைக்கப் பெறவில்லை. அதில் மேலும் தகவல்கள் இருக்க வாய்ப்புண்டு.

அறப் பணிக்கு தானம் வழங்கிய தகவல் இதில் உள்ளது. இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொண்டால் விரிவான தகவல்கள் கிடைக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.