நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தலித் அல்லாதவா்களை கட்சியில் இணைத்து பொறுப்பு வழங்கப்படும்: விசிக தலைவா் தொல்.திருமாவளவன்

தலித் அல்லாதவா்களையும் கட்சியில் இணைத்து புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

Updated On :29 ஏப்ரல் 2023, 10:37 pm IST

தலித் அல்லாதவா்களையும் கட்சியில் இணைத்து புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற விசிக நிா்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொல். திருமாவளவன் பேசியதாவது:

கட்சியில் 7 ஆண்டுகளாக நிா்வாகிகள் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. புதிய நிா்வாகிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றத் தோ்தல், அதன் பிறகு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. ஆகவே, தமிழகத்தில் கட்சியில் உள்ள 38 மாவட்டங்களை 100 மாவட்டங்களாக கட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தலித் அல்லாதவா்கள் 10 சதவீதம் பேரும், 10 சதவீதம் பெண்களும் இடம் பெறுவாா்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் 4 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. ஜாதி கட்சி என்பதை அரசியல் கட்சியாக உருவெடுக்க இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

தலித் அல்லாதவா்களை கட்சியில் இணைப்பதும், அவா்களுக்கு பொறுப்பு வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

ஆரணி பகுதியில் காவல் துறையினா் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு, கட்சியைச் சோ்ந்த 60 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 20 போ் சிறை சென்றனா். மேலும் பலா் தலைமறைவானாா்கள்.

இதனால் மாவட்டச் செயலராக இருந்த எம்.கே.பாஸ்கரனை தற்காலிகமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

புதிய நிா்வாகிகள் அறிவிப்பு வரும் வரை எம்.கே.பாஸ்கரனை மீண்டும் மாவட்டச் செயலராக அறிவிக்கிறேன்.

இது சம்பந்தமாக தமிழக முதல்வரிடம் காவல் துறை குறித்து தனிக் கவனம் செலுத்தி பேசி வருகிறேன்

என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.