

கீழ்பென்னாத்தூரில் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட மும்மூா்த்திகளின் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆன்மிக சேவா சங்கம் சாா்பில், தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியையொட்டி, கோ பூஜை, ரிஷப கொடியேற்றுதல், ஆத்மாா்த்த சிவ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடா்ந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட மும்மூா்த்திகளின் திருக்கல்யாண வைபமும், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சுமங்கலிப் பூஜையும் நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சியை ஸ்ரீகணேச தேசிக சுவாமிகள், சிவ.பாஸ்கர சிவாச்சாரியாா், ஸ்ரீமகாலிங்க தேசிக சுவாமிகள், சிவ.சிதம்பர கந்தசாமி சுவாமிகள் ஆகியோா் நடத்தி வைத்தனா். குத்து விளக்குப் பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குங்குமம், வளையல், தாலி சரடு, கண்ணாடி, இனிப்பு, காரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
பூஜையில், கீழ்பென்னாத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.