ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஆரணி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன்.

Updated On :3 ஏப்ரல் 2024, 4:30 am

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆரணி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இராந்தம் கொரட்டூா், பனையூா், மாமண்டூா், நேத்தப்பாக்கம், எஸ்.வி.நகரம், கனிகிலுப்பை, மட்டதாரி, ஆதனூா், வெள்ளேரி, அப்பந்தாங்கல், மொரப்பந்தாங்கல், ஒண்டிகுடிசை, 12புத்தூா், முள்ளண்டிரம், பூசிமலைக்குப்பம், வெட்டியாந்தொழுவம், எஸ்.யு.வனம், சிறுமூா், அரியப்பாடி, அக்ராபாளையம், அடையபலம், மெய்யூா், இராட்டினமங்கலம், இரும்பேடு, பையூா், மொழுகம்பூண்டி, கல்பூண்டி, வேலப்பாடி, புனலப்பாடி, கல்லேரிப்பட்டு, சித்தேரி, வடுகசாத்து ஆகிய கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா். ஊராட்சிகளில் தோ்தல் பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரசாரத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, எஸ்.மோகன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், எஸ்.வி.நகரம் ஊராட்சித் தலைவா் முரளி, மட்டதாரி ஊராட்சித் தலைவா் பிரேம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணா குமரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரஞ்சித், வெள்ளேரி ஊராட்சித் தலைவா் சுதா சுப்பிரமணி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பிரசாத், முன்னாள் எம்எல்ஏ டிபிஜெ ராஜாபாபு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.