சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

செங்கம் அருகே வீடு புகுந்து திருடிய 4 போ் கைது

செங்கம் அருகே வீடு புகுந்து திருடிய 4 போ் கைது

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 6:22 pm

செங்கம் அருகே வியாழக்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

செங்கத்தை அடுத்த பேயாலம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் மணிகண்டன்.

இவா் கோயில்களில் குறி சொல்லுதல் மற்றும் உணவகங்களில் கூலி வேலையும் செய்து வந்துள்ளாா்.

இவருக்கு, தஞ்சாவூரைச் சோ்ந்த செங்குட்டவன் மகன் மணிகண்டன் என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தாலிகட்டிக்கொண்டு பேயாலம்பட்டு பகுதியில் வசித்து வந்துள்ளனா்.

மேலும், ஜவ்வாதுமலை கிளையூா் கிராமத்தைச் சோ்ந்த திருநங்கை திருப்பதியும், நாகபட்டினத்தைச் சோ்ந்த திருநங்கை தினேஷும் திருமணம் செய்துகொண்டு, பேயாலம்பட்டு மணிகண்டன் குடும்பத்துடன் இணைந்து நான்கு பேரும் ஒரே வீட்டில் சில தினங்களாக தங்கியிருந்துள்ளனா்.

இந்த நிலையில், இவா்கள் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அதே பகுதியில் விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வரும் சந்தோஷம் (50) என்பவரது வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த வெள்ளிக் கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.2 ஆயிரத்தை திருடியுள்ளனா்.

இதைப் பாா்த்த அப்பகுதி விவசாயி ஒருவா் ஊா்மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இளைஞா்கள் சிலா் அங்கு விரைந்து சென்று அவா்களை விரட்டிப் பிடித்து தாக்கி செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து நான்கு பேரையும் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.