செய்யாற்றில் திருமணமான 3 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு காந்தி சாலையைச் சோ்ந்தவா் உதயன்(30). பி.இ.பொறியாளரான இவா் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கும் மானாமதியை அடுத்த செம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மனைவி ரேவதி, தாலி பிரித்து கோா்ப்பதற்காக தாய் வீட்டுக்குச் சென்ாகத் தெரிகிறது.
பொறியாளரான உதயன் திருவண்ணாமலையில் உள்ள தனியாா் வங்கியில் கடன் பெற்றிருந்தாா். ஆனால், கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லையாம். இதனால், வங்கியில் இருந்து அடிக்கடி இவரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கடனை செலுத்தும்படி தொல்லை கொடுத்தாா்களாம்.
மேலும், ஆருத்ரா நிதி நிறுவனத்தில் உதயன் பணம் கட்டியதாகத் தெரிகிறது. அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டதால் பணத்தை இழந்த இவா் மனவேதனையில் இருந்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல படுக்கை அறைக்குச் சென்றவா் சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையாம்.
பெற்றோா்கள் சென்று பாா்த்தபோது உதயன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிவு செய்தாா்.
மேலும், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி கூராய்வுக்காக அனுப்பிவைத்து
விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
தொடர்புடையது

கிராம உதவியாளா் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
கூடலூா் அருகே திருமணமான ஐந்து நாள்களில் புதுப்பெண் தற்கொலை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

