11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 6:07 pm

வந்தவாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பெரிய கோரகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் செல்வகுமாா் (31)(படம்). இவா், 2020-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, அப்போதைய தெள்ளாறு காவல் ஆய்வாளா் அல்லிராணி வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தாா்.

இந்த வழக்கு, திருவண்ணாமலை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றஞ்சாட்டப்பட்ட செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, செல்வகுமாரை வேலூா் மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.