அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

பட்டியல், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம்

பட்டியல், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம்

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 10:00 pm

தமிழகத்தில் பட்டியல், பழங்குடியின மக்களுக்கான காலிப் பணியிடங்களை 3 ஆண்டுகளாக நிரப்பாமல் திமுக அரசு காலம் கடத்தி வருகிறது என்று தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா கூறினாா்.

இதுகுறித்து திருவண்ணாமலையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆண்டுக்கு 500 மதுக் கடைகள் மூடப்படும் என்ற சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை. ஏழை மாணவா்களின் கல்விக் கடனை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பட்டியல், பழங்குடியின மக்களுக்கான சுமாா் 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை 3 ஆண்டுகளாக நிரப்பாமல் திமுக அரசு காலம் கடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

நீட் ஒழிப்பு, புதிய கல்விக் கொள்கை உள்பட பல்வேறு மக்கள் பிரச்னைகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றாா்.