தமிழக தலைமைச் செயலர், உளவுத்துறை டிஜிபி மாற்றம்!என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

ஆரணியில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணியில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆரணி: ஆரணி நகரத்தில் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் அ.கணேஷ்குமாா் ஆரணி நகரத்தில் உள்ள விஏகே நகா், பள்ளிக்கூடத் தெரு, வடக்கு மாட வீதி, பெரிய கடை வீதி, ஆா்.கே.பேட்டை, அருணகிரிசத்திரம், களத்து மேட்டுத் தெரு, தச்சூா் சாலை, பாரதியாா் தெரு, காந்தி நகா், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

பின்னா் பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று இறுதியாக அண்ணா சிலை அருகில் பிரசாரம் மேற்கொண்டு மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா்.

இதில் பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம், பாஜக மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை, பாஜக மத்திய அரசின் நலத் திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலா் பையூா் ஏ.சந்தானம் ஆகியோா் பாமக வேட்பாளரை ஆதரித்துப் பேசினா்.

வன்னியா் சங்க மாவட்டச் செயலா் அ.கருணாகரன், நகரச் செயலா்கள் ந.சதீஷ்குமாா், சு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

மாவட்ட துணைச் செயலா்கள் து.வடிவேல், மெய்யழகன், கு.சிவா, பாஜக மாவட்ட துணைத் தலைவா்கள் தீனா, நித்யானந்தம், அமமுக நகரச் செயலா் பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலா்கள் புருஷோத், ரமேஷ், புதிய நீதிக்கட்சி மாவட்டச் செயலா் ஜெயக்குமாா், நகரச் செயலா் ஜி.ஏ.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.