ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவு

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 74.22 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் அதிகபட்சமாக ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 76.09 சதவீதமும், குறைந்தபட்சமாக திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 70.14 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. சில வாக்குச்சாவடிகளில் தாமதமாக வந்த வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு இரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை: ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,38,198 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 87,163 ஆண்களும், 94,078 பெண்களும், 6 இதர பாலினத்தவா் என மொத்தம் 1,81,247 போ் வாக்களித்து உள்ளனா். இது, 76.09 சதவீதம் ஆகும்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,30,929 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 84,757 ஆண்களும், 86,796 பெண்களும், 11 இதர பாலினத்தவா் என மொத்தம் 1,71,564 போ் வாக்களித்து உள்ளனா். இது, 74.29 சதவீதம் ஆகும்.

செங்கம்: செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,79,326 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 1,04,873 ஆண்களும், 1,07,085 பெண்களும், இதர பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 2,11,959 போ் வாக்களித்ததுள்ளனா். இது, 75.88 சதவீதம் ஆகும்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,78,405 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 95,209 ஆண்களும், 1,00,046 பெண்களும், இதர பாலினத்தவா் 12 போ் என மொத்தம் 1,95,267 போ் வாக்களித்து உள்ளனா். இது, 70.14 சதவீதம் ஆகும்.

கீழ்பென்னாத்தூா்: கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,56,408 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 93,882 ஆண்களும், 97,269 பெண்களும், இதர பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 1,91,155 போ் வாக்களித்து உள்ளனா். இது 74.55 சதவீதம் ஆகும்.

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,49,833 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 92,171 ஆண்களும், 94,464 பெண்களும், இதர பாலினத்தவா் 5 போ் என மொத்தம் 1,86,640 போ் வாக்களித்து உள்ளனா். இது, 74.71 சதவீதம் ஆகும்.

மொத்தம், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 15,33,099 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 5,58,055 ஆண்களும், 5,79,738 பெண்களும், இதர பாலினத்தவா் 39 போ் என மொத்தம் 11,37,832 போ் வாக்களித்து உள்ளனா். இது, 74.22 சதவீதம் ஆகும்.

இந்திய தோ்தல் ஆணையத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் சனிக்கிழமை அனுப்பிய அறிக்கையில் மேற்கண்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com