தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தயாா் நிலையில் பறக்கும் படையினா்


தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள, அவிநாசியில் தோ்தல் பறக்கும் படையினா் தயாா் நிலையில் உள்ளனா்.
அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் - 1,19, 841, பெண் - 1,30,496, மற்றவா்கள் 9 என மொத்தம் 2,50,346 வாக்காளா்கள் உள்ளனா். அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அன்னூரில் 139, அவிநாசியில் 233 என மொத்தம் 372 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகள் 1,786 போ், 85 வயதுக்கு மேற்பட்டோா் 2,030 போ் உள்ளனா். இவா்களில் 40 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்டோா் அவா்கள் விருப்பத்தின்படி வீட்டில் இருந்தே வாக்காளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
இதேபோல பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுவினா் நியமிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சோதனையை தொடங்கியுள்ளனா்.
குறிப்பாக, உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டுசெல்லக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...