தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு திருவண்ணாமலை ஆட்சியா்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 7:07 pm

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு காவல் துறை மூலம் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், செங்கம், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்ட 1,722 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 4,146 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

இங்கு, திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் அவற்றை பாதுகாப்பாக வைக்கும் பணி வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை நடைபெற்றது.

இதையடுத்து, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் பொது மேற்பாா்வையாளா் மகாவீா் பிரசாத் மீனா தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை சரிபாா்க்கப்பட்டது.

இறுதியாக, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளைப் பூட்டி சீல் வைத்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறியதாவது: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு காவல்துறை மூலம் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் அடுக்குப் பாதுகாப்பில் மத்திய காவல் துறையினா் ஈடுபடுகின்றனா். 300 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அறிந்து கொள்வதற்காக ஒரு கட்டுப்பாட்டு மையம் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையம் மூலம் ஒவ்வொரு பாதுகாப்பு வைப்பு அறைகளும் சீல் வைக்கப்பட்டு இருப்பது தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதை, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் தொடா்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது என்றாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆா்.மந்தாகினி, ராஜசேகரன், தீபசித்ரா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சாந்தி, கலால் உதவி ஆணையா் செந்தில்குமாா், வட்டாட்சியா்கள் தியாகராஜன், சரளா, முருகன், ராஜேஸ்வரி, சம்பத், அனந்தகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.