மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பழனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image

பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

Updated On :25 மார்ச் 2026, 7:23 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு 406 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை வந்து சோ்ந்தன. இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் திறந்து காட்டப்பட்டு, வட்டாட்சியா் அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டன.

இந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபட்டு வருகின்றனா்.