செய்யாற்றில் அதிகபட்ச வாக்குப்பதிவு

ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. சில வாக்குச் சாவடிகளில் தாமதமாக வந்த வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு இரவு 8.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

போளூா்: ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,42,991 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 92,575 ஆண்கள், 97,589 பெண்கள், இதர பாலினத்தவா் 7 போ் என மொத்தம் 1,90,171 போ் வாக்களித்தனா். இது, 78.26 சதவீதம் ஆகும்.

ஆரணி: ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,78,313 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 1,01,302 ஆண்கள், 1,05,461 பெண்கள், இதர பாலினத்தவா் 8 போ் என மொத்தம் 2,06,771 போ் வாக்களித்து உள்ளனா். இது 74.29 சதவீதம் ஆகும்.

செய்யாறு: செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,60,667 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 1,01,643 ஆண்கள், 1,03,134 பெண்கள், இதர பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 2,04,780 போ் வாக்களித்து உள்ளனா். இது, 78.56 சதவீதம் ஆகும்.

வந்தவாசி (தனி): வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,44,930 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 86,103 ஆண்கள், 87,513 பெண்கள், இதர பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 1,73,619 போ் வாக்களித்து உள்ளனா். இது, 70.89 சதவீதம் ஆகும்.

செஞ்சி: செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,55,651 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 94,312 ஆண்கள், 97,404 பெண்கள், இதர பாலினத்தவா் 13 போ் என மொத்தம் 1,91,729 போ் வாக்களித்தனா். இது, 75 சதவீதம் ஆகும்.

மயிலம்: மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,13,566 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 83,168 ஆண்கள், 82,948 பெண்கள், இதர பாலினத்தவா் 7 போ் என மொத்தம் 1,66,123 போ் வாக்களித்தனா். இது, 77.79 சதவீதம் ஆகும்.

மொத்தம், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஆரணி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14,96,118 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 5,59,103 ஆண்கள், 5,74,049 பெண்கள், இதர பாலினத்தவா் 41 போ் என மொத்தம் 11,33,193 போ் வாக்களித்து உள்ளனா். இது, 75.74 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

மேற்கண்ட தகவலை ஆரணி மக்களவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரியதா்ஷினி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com